கம்மாபுரம் பகுதி கோவில்களில் சஷ்டி பூஜை
ADDED :3298 days ago
கம்மாபுரம்: ஐப்பசி மாத சஷ்டியொட்டி, கம்மாபுரம் பகுதி சுப்ரமணியன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. கம்மாபுரம் அடுத்த விருத்தகிரிகுப்பம் சுப்ரமணியர் கோவிலில், நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை, தொடர்ந்து, சூரசம்கார நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். அதேபோல், கம்மாபுரம், சி.கீரனுார், விளக்கப்பாடி சுப்ரமணியர் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை நடந்தது.