வீரட்டானேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியர் சூரசம்ஹார விழா
ADDED :3298 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்கார விழா நடந்தது. காலை 10:30 மணிக்கு சுப்ரமணியர் சன்னதியில் விக்னேஷ்வர பூஜை புண்யாகவாசனம் பஞ்சாசன பூஜை சுப்ரமண்யர் ஆவாகனம் ஆவரன பூஜை வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியருக்கு மகா அபிஷகம் சகசர நாமார்ச்சனை மகா தீபாராதனை நடந்தது. மாலையில், மூலமூர்த்திகளுக்கு தீபாராதனை சுப்ரமணியர் சிவானந்தவள்ளி சன்னதியில் எழுந்தருளி அம்பாளிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுப்ரமணியர் சூரனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.