உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவுர்ணமி தவிர, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், சோமவார நாட்களில் கிரிவலம் வரக்கூடாதா?

பவுர்ணமி தவிர, அமாவாசை, சிவராத்திரி, பிரதோஷம், சோமவார நாட்களில் கிரிவலம் வரக்கூடாதா?

சாஸ்திரங்களில் சிவபெருமானையும், அம்பாளையும் வழிபடுவதற்கு உரிய விசேஷ நாட்கள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. வளர்பிறையில் வரும் அஷ்டமி, நவமி, சதுர்தசி இவை அனைத்தும் அம்பாளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த திதிகள். தேய்பிறையில் வரும் அஷ்டமி, சதுர்தசி இவை இரண்டும் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உயர்ந்த திதிகள். அதனுடன் திங்கட்கிழமையும் மிகவும் விசேஷமானது. கிருஷ்ணாயாஞ்ச சதுர்தஸ்யாம் அஷ்டம்யாம் ஸோமவாஸரே என்று ஹாலாஸ்ய மாகாத்மியம் சொல்கிறது. இரண்டு தெய்வங்களுக்கும் சேர்த்து ஒருநாள் என்று சொல்ல வேண்டுமானால் பவுர்ணமியைச் சொல்லலாம். காரணம், இருவருமே கலாப்யாம் சூடாலங்க்ருத சசி  கலாப்யாம் நிஜதபப்பலாப்யாம் என்று சிவானந்த லஹரி துவங்கும்போது, சிரசில் சந்திரனுடன் பிரகாசிக்கக் கூடிய தெய்வங்களாக வர்ணிக்கிறது. காரணம், அம்ருதத்தை வர்ஷிக்கக்கூடிய தெய்வங்கள் என்று! சந்திரகிரணம் எப்படி அம்ருதமோ அதுபோல் சந்திரன் தலையில் இருந்து கொண்டு அம்ருதத்தை வர்ஷிக்கக்கூடிய தெய்வங்கள். அதனால், பவுர்ணமி மிகவும் விசேஷ நாள். மற்ற நாட்களிலேயும் கிரிவலம் வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !