சரஸ்வதி அலங்காரத்தில் பிரஹன்நாயகி அம்மன்
ADDED :5132 days ago
உளுந்தூர்பேட்டை : எலவனசூர்கோட்டை ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஸ்ரீபிரஹன்நாயகி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை அருகே உள்ள ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆயுத பூஜை விழா நடந்தது. இதனையொட்டி நேற்று ஸ்ரீபிரஹன்நாயகி அம்மனுக்கு பால், தயிர் , இளநீர், பன்னீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சர்வ சரஸ்வதி அலங்காரத்தில் ஸ்ரீபிரஹன்நாயகி அம்மன் அருள் பாலித்தார்.இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ், ஜீவானந்தம், விஜி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.