மேல்மலையனூர் கோவிலில் ரூ.15 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :5132 days ago
அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் 15 லட்சம் ரூபாய் உண்டியல் பணம் வசூலானது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமாவாசை தோறும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். புரட்டாசி மாத அமாவாசை முடிந்து நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் அறநிலையதுறை உதவி ஆணையாளர்கள் ரகுராமன், குமரதுரை முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் 14 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் பணமும், 70 கிராம் தங்க நகை மற்றும் 320 கிராம் வெள்ளி நகைகள் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது கணக்கிடப்பட்டது. இப்பணியில் மேலாளர் முனியப்பன் அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர்.