உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை மகரவிளக்கு: குமரியில் ஏற்பாடுகள் தீவிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

சபரிமலை மகரவிளக்கு: குமரியில் ஏற்பாடுகள் தீவிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பு

நாகர்கோவில்: சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வெளிமாநில மற்றும் தமிழகத்தின் வெளிமாவட்டங்களை சேசர்ந்த பக்தர்கள் கன்னியாகுமரி வருகின்றனர். இங்கு முக்கடல் சங்கமத்தில் நீராடி, பகவதி அம்மனை வழிபடுகின்றனர். இதனால் மண்டல -மகரவிளக்கு சீசன் காலத்தில் பக்தர்கள் கூட்டம் இங்கு அலை மோதும். கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வசதிகள் இந்த கால அளவில் அதிகரிக்கப்படும். இரவு நேரத்திலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் வகையில் 50 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக தற்காலிக குடிநீர் பைப்புகள் அமைக்கப்படுகிறது. கூடுதல் கழிவறைகளும் திறக்கப்படுகிறது. பாதுகாப்புக்காக நான்கு இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் போலீஸ் உதவி மையம் 24 மணி நேரமும் செசயல்படும். சீசனையொட்டி 623 தற்காலிக கடைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பொது ஏலம் நேற்று மூன்றாவது நாளாக நடைபெற்றது. சபரிமலை பக்தர்களை எதிர்கொள்ள கன்னியாகுமரி வேகமாக தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !