சபரிமலையில் தீவிரவாத தாக்குதல் கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
சபரிமலை, சபரிமலையில் வரும் சீசனில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் படி மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மண்டல- மகரவிளக்கு சீசன் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசு, கேரள அரசு தலைமை செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சபரிமலையில் பாதுகாப்பை அதிகரிக்கும் படி உத்தரவிட்டுள்ளது. அந்த கடிதத்தில் கூறியள்ளதாவது: தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்க வேண்டும். சீசன் காலத்தில் அதிக கவனமான பாதுகாப்பு நடவடிக்கை அமலில் இருக்க வேண்டும். மெட்டல் டிடெக்டரில் கண்டு பிடிக்க முடியாத அளவில் தீவிரவாதிகள் பாதுகாப்பு வளையங்களை தாண்ட வாய்ப்பு உள்ளது. நவ.,15-ல் ஆரம்பிக்க உள்ள சீசனில் இந்த தாக்குதல் நடைபெறலாம். எனவே, சபரிமலை மற்றும் சபரிமலை பிரதேசங்களை உள்ளடக்கி பாதுகாப்பு வளையம் உருவாக்கி, தவறுகள் நடக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைளை வெகு வேகமாக செய்து முடிக்க வேண்டும். சபரிமலையை உள்ளடக்கிய அந்த பகுதியின் வரைபடம் தீவிரவாதிகள் கைவசம் உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.