திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் வர உகந்த நேரம்
ADDED :3562 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், வரும், 13 இரவு, 10:29 மணிக்கு துவங்கி, 14 இரவு, 8:09 மணிக்கு முடிகிறது. இந்த நேரம் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு வரும், 13, 14ல், அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 50 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். மூன்றாம் பிரகாரத்தில் தரிசன வரிசையை அனுமதிப்பதில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே, காத்திருக்கும் நேரம் குறைய வாய்ப்புள்ளது.