வீரன் சுவாமி கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம்
ADDED :3261 days ago
வேட்டமங்கலம்: கரூர் தாலுகா, வேட்டமல்கலம் அடுத்த ஒரம்புபாளையத்தில் வீரன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கருப்பண்ணசாமி, வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், விநாயகர் ஆகியோருக்கு, தனித்தனியாக சன்னதி உள்ளது. நேற்று முன்தினம் அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனம், குங்குமம், இளநீர், திரவியப் பொடிகள், திருநீறு போன்ற மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் பல்வேறு மலர்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.