உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடைப்பாடி மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

இடைப்பாடி: வீரப்பம்பாளையம், மாரியம்மன் கோவிலில், இன்று கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலம் வந்தனர். இடைப்பாடி, வீரப்பம்பாளையம், மாரியம்மன் கோவிலில், இன்று, கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, கோபுரம் மீதுள்ள கலசங்களையும், அதன் மீது புனித நீர் ஊற்ற, கல்வடங்கத்தில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடங்கள் எடுத்து, இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் இருந்து, வீரப்பம்பாளையம் வரை, ஊர்வலமாக வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !