நீலமங்கலம் கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :3478 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் உள்ள செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினத்தன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில் 8வது திருமுறையாக திருவாசகம் உள்ளது. மாணிக்கவாசகர் இயற்றிய இந்த திருவாசகத்தின் 51 பதிகங்களையும், அதில் உள்ள 658 பாடல்களையும், கோவில் ஓதுவார்கள் முழுவதுமாக ஓதினர்.