தீவனூரில் திருவோண தீபம்
ADDED :3353 days ago
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாரயணப் பெருமாள் கோவிலில், திருவோண தீபம் ஏற்றப்பட்டது. திண்டிவனம் அடுத்த தீவனுாரில், பிரசித்திபெற்ற லட்சுமிநாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. பிரதிமாதம் நாராயணப்பெருமாளின் நட்சத்திரமான திருவோண நட்சத்திர தினத்தையொட்டி, சுவாமி வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அன்று மாலை, கோவிலுக்கு எதிரிலுள்ள ௩௨ உயர கற்கம்பத்தில் திருவோண தீபம் ஏற்றி, வழிபாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவிலின் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.