காட்டுநெமிலியில் கும்பாபிஷேக விழா
ADDED :3272 days ago
உளுந்துார்பேட்டை: காட்டுநெமிலி கோவி லில், இன்று கும்பாபி ஷேக விழா நடக்கிறது. உளுந்துார்பேட்டை தாலுகா, காட்டுநெமிலி கிராமத்திலுள்ள சித்திவிநாயகர், முத்துமாரியம்மன், அங்காளபரமேஸ்வரி, ஐயனார்பூரணி, பொற்கலை, நவக்கிரஹம், சுப்ரமணியர் சிவலிங்கம், பெரியாயி, பாவடைராயன், துர்கை, சுடலைகாளி, வீரபத்திரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.