உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி மேல் வெற்றி

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) வெற்றி மேல் வெற்றி

நல்லதை மட்டுமே நினைக்கும் மிதுன ராசி அன்பர்களே!

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு  அவர் 6-ம் இடமான துலாமில் இருக்க, இந்த மாதம் தொடங்குகிறது. இது சிறப்பான நிலை.  சாதகமாக உள்ள புதனால் எதிலும் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நல்லபடியாக நடக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  நடக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதன் நவ.25-க்கு பிறகு சாதகமற்ற நிலைக்கு சென்று விட்டாலும் கூட அதிக பாதிப்பு ஏற்படாது  ஏனெனில் சூரியன் தரும் நன்மை மாதம் முழுவதும் கிடைக்கும். கேது, செவ்வாயால் எதிரிகளின் இடையூறுகள் வந்தாலும் அதை சூரியன் முறியடி ப்பார். அவரால் காரிய அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். குடும்பத்தினர் மற்றும் வெளியிடங்களில் மதிப்பு மரியாதை சிறப்பாக  இருக்கும். மேலும் சனி, ராகு ஆகியோர் தரும் நற்பலன்களும் தொடரும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். நவ.25-க்கு பிறகு கணவன்- மனைவி  இடையே  சிறு சிறு பிரச்னை வந்து மறையும். டிச.4-க்கு பிறகு சுக்கிரனால்  வசதி பெருகும். குடும்பம் ஆனந்தமாக இருக்கும். பொருளாதார வளம்  கூடும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நவ.17,18, டிச.14,15ல் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நவ.25,26-ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். ஆனால்  டிச.10,11-ல் அவர்களால் நன்மை ஏற்படும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். பொருளாதார வளம்  கூடும். தொழில் விஷயமாக வெளியூர் சென்றவர்கள்  வீடு திரும்புவர்.  பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் டிச.4-க்கு பிறகு மறையும்.  அதன்பின் அதே பெண்கள் தங்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். நவ.16,19,20, டிச.8,9-ல் பண விஷயத்தில் கவனமாக  இருக்கவும். ஆனால் நவ.29,30ல் எதிர்பாராத வகையில் லாபம் கொட்டும். நவ.25-க்கு பிறகு சிறு சிறு குழப்பம் நிலவும். அதை பொறுமையுடன்
சமாளியுங்கள்.

பணியாளர்கள் சூரியனின் பலத்தால் நல்ல பலன் கிடைக்கப் பெறுவர். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். ÷ காரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். புதனால் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு  அதிகரிக்கும். நவ.25-க்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. டிச.8,9-ல் எதிர்பாராத வருமானத்துக்கு இடமுண்டு.

கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் தொல்லை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.5க்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள், புகழ் பாராட்டு  கிடைக்கும். பொருளாதார வளம் கூடும்.

அரசியல்வாதிகள் நல்ல நிலையில் இருப்பர். பணப்புழக்கத்திற்கு குறை இருக்காது. நவ.26,27,28ல் தலைமையிடம் குட்டு வாங்கும் நிலை வரலாம்.  கவனமாக இருக்கவும்.

மாணவர்கள்  கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடந்தால் மேலும் முன்னேற்றம் கிடைக்கும். அதிக முயற்சி  எடுத்தால் மிகச் சிறப்பான பலனை காணலாம்.

விவசாயிகளுக்கு  நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம், காய்கறி மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்து  இருங்கள். வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உயர் பதவி தேடி வரும். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு,  வங்கிக் கடன், எளிதாக கிடைக்கும். நவ.21,22,23ல் புத்தாடை, நகை வாங்கலாம். டிச.1,2,3ல்  விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள்  மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஆடம்பரச் செலவை குறைப்பதன் மூலம் கடன் தொல்லைக்கு ஆளாகாமல் தப்பலாம். உடல் ஆரோக்கியம் ÷ மம்படும். பயணத்தின் போது கவனம் தேவை.

நல்ல நாள்: நவ.17,18,21,22,23,29,30 டிச.8,9,10,11,14,15

கவன நாள்: டிச.1,2,3- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். சுபநிகழ்வு குறித்த பேச்சுவார்த்தையைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: சிவப்பு, ஊதா

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை நரசிம்மரை வழிபட தவறாதீர்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்.  பசுவுக்கு பசுந்தழை போட்டால் குடும்ப நிலை மேம்படும். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !