உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும்

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) பணப்புழக்கம் கூடும்

எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கடக ராசி அன்பர்களே!

சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு  இந்த மாதம் நவ.25-க்குப் பிறகு புதனால் பல முன்னேற்றங்களை காணலாம். இருப்பினும் மற்ற  கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால், எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டி இருக்கும். ஆனால் அந்த முயற்சிக்கு  தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ராசிநாயகன் சந்திரன் மாதத்தின் பெரும்பாலான நாட்கள் சாதகமாக இருப்பதால் எடுத்த செயல்கள் வெற்றி  அடையும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கு, மதிப்பு மரியாதை கூடும். குடும்பத்தில் கடந்த மாதம் இருந்து வந்த பிரச்னைகள் சூரியனைக்  கண்ட பனிபோல் விலகி விடும்.  மாதத் தொடக்கத்தில். கணவன், -மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். எனவே ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து போகவும். அதன் பிறகு  கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை உருவாகும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று  சேரும். நவ.26,27,28-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஆனால் டிச. 12,13-ல் அவர்களால் நன்மை கிடைக்கும். நவ.19,20, டிச.10,  11-ல் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். பிள்ளைகள் வகையில் எதிர்பார்த்த பலனைக் காண முடியாது.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் அதிக முதலீடு போட வேண்டாம். புதிய தொழில் தொடங்க இது உகந்த காலம் அல்ல. முதல் இல்லாத வேலை எது  வேண்டுமானாலும் செய்யலாம். போட்டியாளர்களின் இடையூறு சற்று அதிகமாக இருக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல இருப் பவர்கள் நவ.25க்கு பிறகுள்ள நல்ல நாளைத் தேர்ந்தெடுத்தால் போகிற வேலை வெற்றிகரமாக முடியும். எப்படியிருப்பினும் இருக்கிற லாபத்தை  தக்க வைத்துக் கொள்ளலாம். டிச.1,2,3-ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நவ.17,18,21,22,23, டிச.14,15ல் கல்லாப்பெட்டி உங்கள் கவனத்தில்  இருக்கட்டும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம். சிலர் இடமாற்றம் காணலாம்.  அலைச்சல் ஏற்படும்.  அதன் பிறகு புதன் சாதகமான இடத்திற்கு வந்து விடுவதால் பதவி உயர்வுக்கான வாய்ப்பு வந்து விடும். அலுவலகத்தில் உ ங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். டிச.10,11-ல் கைவிட்டுப் போன பொருள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும்
டிச. 4-க்கு பிறகு மறையும். பெண்கள் வகையில் தொல்லை வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.

அரசியல்வாதிகள் புதிய பதவியை எதிர்பார்க்க முடியாது என்றாலும் திருப்தியுடன் காணப்படுவர். டிச.6-க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டிய திருக்கும்.

மாணவர்கள் அதிகமாக சிரத்தை எடுத்து படித்தாலும் உயர்வு அடைய முடியாத நிலை இருந்து வந்தது. நவ.25க்கு பிறகு  புதன் சாதக இடத்துக்கு வ ருவதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். நல்ல மதிப்பெண், ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறை இருக்காது. நெல், சோளம் பழ வகைகள் நல்ல மகசூல் தரும். புதிய சொத்து வாங்குவதற்கான அனுகூலம்  குறைவு. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.

பெண்கள், குழந்தைகளிடம் கண்டிப்பான அணுகுமுறையை செயல்படுத்தினால் தான், அவர்கள் கட்டுக்குள் இருப்பார்கள். வேலைக்கு செல்லும்  பெண்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். சக ஊழியர்கள் மத்தியில் வீண் விரோதம் உருவாக வாய்ப்புண்டு.  நவ.25க்கு பிறகு புதன்  சாதமான இடத்திற்கு வந்து விடுவதால் எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பொருத்தம் கைகூடும். விருந்து  விழா என்று சென்று வரலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். டிச.4,5-ல் சகோதரிகளால்  பணம் கிடைக்கும். நவ.24,25-ல் புத்தாடை, நகை வாங்கலாம்.  உடல் நலம் சுமாராக இருக்கும்.

நல்ல நாள்: நவ. 16,19,20,24,25  டிச.1,2, 10,11,12,13

கவன நாள்: டிச.3,4,5 சந்திராஷ்டமம். இந்த நாட்களில் சுபநிகழ்வுகள் குறித்த பேச்சைத் தவிர்க்கவும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 1,2 நிறம்: வெள்ளை, பச்சை

பரிகாரம்: ராகு, -கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி மற்றும் நவக்கிரக மண்டபத்திலுள்ள குருவுக்கு தீபம்  ஏற்றுங்கள். தினமும் சூரியனை தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்றுவர தவறாதீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !