உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வரவு செலவில் கவனம்

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) வரவு செலவில் கவனம்

நடுநிலையுடன் நடக்க விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் ராகு நன்மை தருவார். ராசி நாயகன் சுக்கிரனால் மாதம் முழுவதும் நன்மை கிடைக்கும். டிச.4- வரை அவர் 3-ம் இடத்தில் இ ருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு, மரியாதை  அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூகநிலை ஏற்படும். குடும்பத்திற்கு ராகு பொன், பொருளை அள்ளித்தருவார். ஆனந்தம் அதிகரிக்கும். பெண்கள்  மிக உறுதுணையாக  இருப்பர். நவ.26, 27,28-ல் சகோதரிகள் உதவிகரமாக இருப்பர். நவ. 21,22,23-ல் சொந்த பந்தங்கள் வருகையும் அவர்கள்  மூலம் அனுகூலமும் கிடைக்கும். ஆனால் டிச.4,5ல் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள்- அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பெண்களைப் பங்குதாரராகக் கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம்  அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். கடந்த மாதம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு முதலியன இருக்காது.  ஆனால் அவரால் சிறுவிரயம் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. நவ.18,19, 22,23,24,25,29,30ல் பணப்பொறுப்பை நீங்களே நேரடிய õக ஏற்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இழப்பைச் சந்திக்க நேரிடலாம். டிச.8,9-ல் எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதனால் சிலருக்கு வீண்  மனக்கவலை வரலாம். நவ.25க்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். போட்டியாளர்களால் இடையூறு வரலாம்.

பணியாளர்களுக்கு- சுக்கிரனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், அனுசரணையும் கிடைக்கும். ÷ காரிக்கைகள் நிறைவேறும்.  விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன நவ.25-க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். நவ.19,20-ல் எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்கள்- புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்  எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. தேவையற்றவர்கள் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள், அவர்கள் பிடியில்  இருந்து டிச.6க்கு பிறகு விடுபடுவர். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. நவ.25-க்கு பிறகு சிலர் கெட்டபெயர் எடுக்க வாய்ப்பு உள்ளது  சற்று ஒதுங்கி இருக்கவும். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.

விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்.  மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். புதிய சொத்து  வாங்கும் எண்ணம் தள்ளிபோகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள்  மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனைப்  பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை டிச.1,2,3-ல் புத்தாடை, நகை வாங்கலாம். பெற்றோர்  வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். டிச.10,11 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். பி ள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரிகளால் உதவியும், பணமும் கிடைக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். கண் விஷயத்தில் கவனம் ÷ தவை. டிச.6-க்கு பிறகு பிள்ளைகள் உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். டிச. 6,7-ல் சுதந் திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.

நல்ல நாள்: நவ.19,20,21,22,23,26,27,28 டிச.1,2,3,8,9,10

கவன நாள்: நவ.16, டிச.11,12,13- சந்திராஷ்டமம். இந்த நாட்களில் புதிய முயற்சி ஏதும் செய்ய வேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தொடர்பான ÷ பச்சுவார்த்தையை தள்ளிப் போடலாம். அனாவசியமாக எதிலும் தலையிடக்கூடாது.

அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம் : வெள்ளை,  நீலம்

பரிகாரம்: பசுவுக்கு பசுந்தழை கொடுங்கள். புதன்கிழமை குலதெய்வத்தை  வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபடுங்கள்.  காலையில் காக்கைக்கு அன்னமிடுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !