திருவண்ணாமலை கோவிலில் சனிபிரதோஷ விழா!
ADDED :3366 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத சனிபிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு நடந்த பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் கோவில் உள்பிரஹாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.