கல்பாத்தி கோவில் தேரோட்டம்: பக்தர்கள் பங்கேற்பு!
ADDED :3287 days ago
பாலக்காடு: பாலக்காடு அருகே கல்பாத்தியில், பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலின் தேர் திருவிழா, நேற்று துவங்கியது. கல்பாத்தியின் நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்த நிலையில், திருக்கல்யாண உற்சவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளான இன்று, மந்தக்கரை மகா கணபதி கோவில் தேர், திருவீதிகளில் வலம் வருகிறது. நாளை, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள் திருத்தேரோட்டம், சாத்தப்புரம் பிரசன்ன கணபதி கோவில் தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன. மாலை, 6:00 மணியளவில், விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் அருகே, ஆறு தேர்களின் சங்கமம் நடக்கிறது.