பஞ்சமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
செஞ்சி: செஞ்சி ஸ்ரீதரணி இண்டர் நஷேனல் பள்ளியில் பஞ்சமுக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. செஞ்சி சந்தை மேடு ஸ்ரீதரணி இண்டர் நஷேனல் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த 13ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு 12ம் தேதி மாலை 6 மணிக்கு தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம் நடந்தது. இரவு 9 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜையும் நடந்தது. கடந்த 13ம் தேதி காலை7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, நாடி சந்தனம், தத்துவார்ச்சனை மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு சங்கீத உபசாரணத்துடன் மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடிற்கு பிறகு, காலை 10 மணிக்கு தரணி கல்வி அறக்கட்டளை சேர்மன் வழக்கறிஞர் தண்டபாணி தலைமையில் பஞ்சமுக விநாயகர், பரிவாரமூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவருக்கு நடந்த அபிஷேகத்திற்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் தமிழ்குமரன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை விழுப்புரம் சூரியநாராயண அய்யர், வெங்கடேச அய்யர் செய்தனர்.