உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்யசாய் அமைப்பின் அகண்ட நாம பஜனை

சத்யசாய் அமைப்பின் அகண்ட நாம பஜனை

கோவை: சத்யசாய் சேவா சங்கம் சார்பில், உலக நலன் கருதி, அகண்ட நாம பஜனை நடந்தது. உலக நலனுக்காக, ஆண்டுதோறும், சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில், அகண்டநாம பஜனை நடைபெறுகிறது. ரேஸ்கோர்ஸ் சத்யசாய் சேவா மந்திரில், நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கிய, அகண்ட நாம பஜனை, நேற்று மாலை, 6:00 மணிக்கு நிறைவடைந்தது. கோவையில் உள்ள, சத்யசாய் சேவா சமிதியை சேர்ந்த, 17 அமைப்புகள் சார்பில், இசைக்கலைஞர்கள் பங்கேற்று, சத்யசாய் பற்றிய தொடர் பஜனை பாடல்களை இசையுடன் பாடினர். ஏராளமான சாய் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !