உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமர் சன்னிதி சம்ரோஷணம் விழா

ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமர் சன்னிதி சம்ரோஷணம் விழா

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஸ்ரீராமர் சன்னிதி சம்ரோஷணம் விழா நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகாரசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த, ஆயிரமாவது ஆண்டு விழா அடுத்த ஆண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.  இந்நிலையில் இந்த கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீராமர் சன்னிதி, கடந்த சில நாட்களுக்கு முன் புனரமைக்கப்பட்டது. ராமர் சன்னிதி மற்றும் விமானத்திற்கு, யாக சாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை, 8:00 மணிக்கு சம்ரோஷணம் விழா நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !