விருத்தாசலத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா
ADDED :3261 days ago
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஆழ்வார் கள் கைங்கர்ய சபை சார்பில் ராமானுஜர் ஆயிரமாண்டு ஜெயந்தி விழா நடந்தது. விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 9:00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் ராமானுஜர் பஜனையுடன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு பெருமாள், ராமானுஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. பகல் 11:00 மணியளவில், ராமானுஜரும் சமுதாய முன்னேற்றமும் என்ற தலைப்பில் சிதம்பரம் டாக்டர் ரங்காச்சாரியாரின் உபன்யாசம் நடந்தது. பிற்பகல் 12:00 மணியளவில் ராமானுஜர் நுாற்றந்தாதி முற்றோதல், அலங்கார தீபாராதனை, சாற்றுமுறை நடைபெற்றது.