உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்

ஐயனார் கோவில் கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் ஸ்ரீபூரணை புஷ்பகலை சமேத குண்டு ஐயனார் கோவிலில் சுவாமி சிலைகளுக்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று (14ம் தேதி) காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 7:00 மணிக்கு கும்ப அலங்காரம், முதல் கால ேஹாம பூஜை நடக்கிறது. 9:30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடக்கிறது. 9:45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்து புதியதாக அமைக்கப்பட்ட சுவாமி சிலைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு மூலவர் குண்டுமணி ஐயனாருக்கு 108 சங்கு அபிஷேகமும், 10:30 மணிக்கு அன்ன அபிஷேகமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !