வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3351 days ago
கடலுார்: கடலுார் ஆனைக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கடலுார், ஆனைக்குப்பம், மாருதி நகரில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை மங்கள இசையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து தேவதா அனுக்ஞை, விநாயகர் பூஜை, மகா கணபதி ேஹாமம், மகாலஷ்மி ேஹாமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, மிருத்சங்க்ரஹனம் நடைபெற்றது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை. கோ பூஜை, நாடிசந்தானம், தத்வார்ச்சனையை தொடர்ந்து 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி காலை 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை பார்த்து பரவசமடைந்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.