உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆன்மிக சொற்பொழிவு

ஆன்மிக சொற்பொழிவு

திட்டக்குடி: ஆவினங்குடி பி.எஸ்.வி., பள்ளியில் மாணவர்களுக்கு ஞாபகசக்தியை அதிகரிக்க தியானப் பயிற்சி, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. பள்ளி நிர்வாகி கீதாசெல்வன் தலைமை தாங்கினார். இஸ்கான் இயக்கத்தைச் சேர்ந்த குரு ஜெகதானந்த சைதன்ய தாசா, ஆன்மிக சொற்பொழிவாற்றி, தியானப்பயிற்சியும் வழங்கினார். மனதை ஒருமுகப்படுத்துவது, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள், ஞாபகசக்தி பெற பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கிப்பேசி பயிற்சி அளித்தார்.  நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சிக்குழுத் தலைவர் கண்ணன், துணை முதல்வர் சுதா, ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !