உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூடை அரிசி சாதத்தில் அன்னாபிஷேகம்!

கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரருக்கு 100 மூடை அரிசி சாதத்தில் அன்னாபிஷேகம்!

பெரம்பலுார்:  அரியலுார் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 100 மூடை அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அருள்பெற்றனர்.

அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் தனது ஆட்சி காலத்தில் (கி.பி. 1012-1044) கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் உள்ளது.  இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான அன்னாபிஷேம் சிறப்பாக நடந்தது. லிங்கத்தின்மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !