உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் காளியம்மன் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம்

பெரியகுளம் காளியம்மன் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம்

பெரியகுளம்:பெரியகுளம் கம்பம்ரோடு காளியம்மன் கோயிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. பால், பன்னீர், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னாபிஷேகம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏற்பாடுகளை குருதட்சிணாமூர்த்தி அறக்கட்டளை ஆலோசகர் சரவணன், தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் மகேஷ், பொருளாளர் பாண்டி, நிர்வாகிகள் செய்தனர்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கார்த்திகை வழிபாடு மற்றும் பவுர்ணமி பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடந்தது. மாவூற்று வேலப்பர் கோயிலில் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பக்தர்கள் குழு சார்பில் வேலப்பர் சுவாமி, கருப்பசுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !