உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேணீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

கேணீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

விக்கிரவாண்டி: தொரவி கேணீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள  தொரவி கிராமத்தில், கரும்பு தோட்டத்தில் கேணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக் கோவிலில், நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை  முன்னிட்டு, கேணீஸ்வரர், தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கேணீஸ்வரருக்கு, அன்னம் மற்றும்  காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீப ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.அபிஷேகம் மற்றும்  பூஜைகளை புதுச்சேரி சரவணன் செய்தார். சிவனடியார்  கோவிந்தராஜன் தலைமையில்,  மாலதி, அர்ச்சனா, அமுதா ஆகியோர்  திருவாசகம் முற்றோதினர். தொரவி வழக்கறிஞர் சம்பத், பாலையா, குமாரவேல், ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவி நாகேஸ்வரி  சங்கர் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !