உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி கோவில்களில் அன்னாபிேஷகம்

பொள்ளாச்சி கோவில்களில் அன்னாபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிேஷக விழா நடந்தது. பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவில் வளாகத்திலுள்ள ருத்ரலிங்கேஸ்வரருக்கு அன்னாபிேஷக விழா நேற்று நடந்தது. இதில், 16 வகை திரவிய அபிேஷகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. ருத்ரலிங்கேஸ்வரர் அன்னம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சிவபெருமானுக்கு சாத்திய அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி ஒடையகுளம் ராஜராஜேஸ்வரி காமாட்சி அம்மன் கோவிலில், அன்னாபி ேஷகம், திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு அண்ணலாம் ஈசன் அன்னா பிசேக திருக்காட்சி அளித்தல், மாலை 6:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 7:00 மணிக்கு 108 சிவநாமம் ஓதுதல், இரவு 7:45 மணிக்கு அபிேஷக அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், அன்னாபிேஷகம் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !