ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
ADDED :3296 days ago
தர்மபுரி: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி உடனுறை மருத வானேஸ்வர் கோவிலிலும், குமாரசாமிப்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனந்த நடராஜருக்கும், சுப்பிர மணிய சுவாமிக்கும் அன்னாபிஷேகம் நடந்தது. இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், பாரதிபுரம் சிவன் கோவில், தர்மபுரி தீயணைப்பு நிலையம் அருணேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர், மொடக்கேரி சக்தி மகாலிங்கேஸ்வரர் கோவில், காரிமங்கலம் அபிதகுஜாலம்பாள் சோமேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ண நாதர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று அன்னாபிஷேகம் நடந்தது.