உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவிலில் நவராத்திரி மஹோத்ஸவம்

ஆஞ்சநேயர் கோவிலில் நவராத்திரி மஹோத்ஸவம்

ஈரோடு: ஈரோடு பெரியார் வீதி, ஆனந்த தீர்த்த டிரஸ்ட், பேஜாவர் மடத்தில் உள்ள, வியாஸ ஆஞ்சநேயா சன்னிதானத்தில் நவராத்திரி விழா நடந்தது. செப்டம்பர் 28ல் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 29ல் ராகவேந்திர அஷ்டாக்ஸர ஹோமம், பஜனை, 30ம் தேதி புருஷ ஸக்த ஹோமம், பஜனை நடந்தது.அக்டோபர் 2ம் தேதி காலை 7 மணிக்கு, நட்சத்திர ஹோமம், தன்வந்தரி ஹோமம், 3ம் தேதி காலை பார்வதி பரமேஸ்வரா ஹோமம், 4ம் தேதி, சரஸ்வதி ஆவாகனை, ஹோமம், துர்க்கா ஹோமம், 5ம் தேதி பவமான ஹோமம் நடந்தது.நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நேற்று காலை 7க்கு, மத்வ ஜெயந்தி, சுதர்ஸன ஹோமம், சீனிவாச கல்யாண மஹோத்ஸவம், தாஸர் பாடல்கள் நடந்தது.ஏற்பாடுகளை டிரஸ்டி ரகோத்தமன், மேனேஜர் வேத வியாஸ் ராவ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !