உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்கம்

முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்கம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட கலைவிழா மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழாவில் அனைத்து சாதி , மதத்தினரும் பாகுபாடின்றி கலந்து கொள்வது தனிச்சிறப்பு வாய்ந்தது. இதன் கோயில் விழா நேற்று முன்தினம் மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. இதில் முனுசாமி ஆர்.டி.ஓ., சக்திவேல்டி.எஸ்.பி., டாக்டர் சையத்பாசுதீன் ,மதபோதகர் ஞான ஆனந்தராஜ் , மதுரை சமூக அறிவியல் கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜா பேசினர் . கலசலிங்கம் பல்கலை வேந்தர் தி. கலசலிங்கம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். காந்திய இயக்க மாநில தலைவர் கரம்சந்த் நல்லுசாமி வரவேற்றார். பக்தசபா செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !