உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஸ்வரன் கோவில் அன்னாபிஷேகம்

ஈஸ்வரன் கோவில் அன்னாபிஷேகம்

குளித்தலை: ஆர்.டி.மலை விராயச்சலேஸ்வர் கோவிலில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. குளித்தலை அடுத்த ஆர்.டி.மலை விராயச்சலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், அன்னாபிஷேக விழா நடந்தது. கோவில் அர்ச்சகர் கந்தசுப்ரமணிய சிவாச்சாரியார், வேதரத்தினம் ஆகியோர், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களை நடத்தி, தீபாரதனை மற்றம் பிரசாதம் வழங்கினர். இதில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டம் அளவந்தீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு, 75 கிலோ எடையில், அரிசி சாதம் தயாரிக்கப்பட்டு அன்னாபி?ஷகம் நடந்தது. இதில், பழையஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !