உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு சிவலோகநாதருக்கு அன்னாபிஷேகம்

கிணத்துக்கடவு சிவலோகநாதருக்கு அன்னாபிஷேகம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி, சிவலோகநாதருக்கு அன்னாபிஷேகம் செய்து தீபராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமியன்று, சிவனுக்கு அன்னத்தால் அபிசேக அலங்கார பூஜை நடப்பது வழக்கம். நேற்று முன் தினம் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி, சிவலோகநாதருக்கு சிறப்பு வேள்வி பூஜை செய்யப்பட்டது. பின், அன்னம் செய்து, சிவலோநாதருக்கு அன்னம் சாத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சிவலோகநாதரை வழிபட்டனர். பின், இரவு 7.00 மணிளவில், அன்னத்தை களைந்து, வேள்வி நீரை ஊற்றியும், சிறப்பு அபிேஷகம் செய்து, அலங்காரம் செய்து தீபராதனை காண்பிக்கப்பட்டது. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கிரிவலம்: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி மலைக்கோவில் அடிவாரத்தில், சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், சஷ்டி குழுவினர் 50 பேர் அடிவாரத்தில் உள்ள விநாயகரை வணங்கிவிட்டு, மலையை சுற்றி கிரிவலம் சுற்ற ஆரம்பித்தனர். கிரிவலப்பாதையில் உள்ள சிவலோகநாதர் கோவிலுக்கு சென்று, உள்பிரகாரம் சுற்றிவிட்டு, பின், மலையை சுற்றி பக்தி பாடல்களை பாராயணம் செய்தபடி கிரிவலம் வந்தனர். இவ்வாறு மூன்று முறை கிரிவலம் வந்து, பின், அடிவாரத்தில் அமர்ந்து, முருகன் துதி பாடல்களை பாடினர். இதுபோன்று பல்வேறு குழுவினர் மாதந்தோறும் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !