உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுார் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிேஷகம்

திருக்கோவிலுார் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிேஷகம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, அன்னாபிேஷகம் நடந்தது. திருக்கோவிலுார், ஆஸ்பிட்டல் ரோடு, வெள்ளை விநாயகர் கோவிலில், 11 அடி உயரமுள்ள பழமையான சிவலிங்கம் உள்ளது.  ஏகாம்பரேஸ்வராகிய சிவலிங்கத்திற்கு, ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிேஷகம் நடந்தது. மயிலம் அடுத்த ஆலகிராமத்தில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட எமதண்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தையொட்டி, அன்னாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள மூலவர், சித்தர், விநாயகர் சுவாமிகளுக்கு வழிபாடு நடந்தது. மாலையில், மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது.

தீவனுார்: திண்டிவனம் அடுத்த தீவனுார் விநாயகர் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. இக்கோவிலில், நேற்று முன்தினம் மாலை, விநாயகருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா செய்திருந்தார்.  சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பியில் உள்ள சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, மூலவருக்கு 17 வகையான அபிஷேகம்  நடந்தது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரில் உள்ள பாலமுருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலமுகிலேஷ்வரருக்கு அன்ன அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !