உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம்!

செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம்!

செஞ்சி: செத்தவரை மோனசித்தர் குருபீட ஆசிரமத்தில், சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, செத்தவரை-–நல்லாண்பிள்ளைபெற்றாள் மோன சித்தர் குருபீட ஆசிரமத்தில்,  மீனாட்சியம்மன் உடனுறை சொக்கநாதப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, சொக்கநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு, மீனாட்சியம்மன் உடனாகிய சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு, சிவஜோதி மோன சித்தர் தலைமையில், கலச பிரதிஷ்டை செய்து, விசேஷ வேள்வி நடந்தது. பகல் 12:00 மணிக்கு, கலசாபிஷேகம், பிற்பகல் 2:00 மணிக்கு, அன்னாபிஷேகம், மகா தீபாராதனை, சிவனடியார்களின்  வாத்திய முழக்கம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !