சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா
ADDED :3277 days ago
ராசிபுரம்: ராசிபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். ராசிபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, அக்., 18ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடுதல், கொடியேற்றம், அக்னி குண்டம், திருத்தேர், சப்தாபரணம் என நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. பல்வேறு பிரிவினர் சார்பில், நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன் வீதி உலா வருகிறார். அவ்வகையில், 25வது நாளான நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனை, திருவீதி உலாவாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கட்டளை திருவிழாவானது வரும், 17 வரையில் நடக்கிறது.