கள்ளக்குறிச்சி சபரிமலை பக்தர்கள் விரதம் துவக்கினர்!
ADDED :3281 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், நேற்று விரதத்தை துவக்கினர். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, யாத்திரை செல்கின்றனர். இதன்படி, கார்த்திகை முதல் தேதியான நேற்று, சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள் மாலை அணியும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி பகுதி கோவில்களில், ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.