வளத்தியில் அன்னாபிஷேக விழா
ADDED :3280 days ago
அவலூர்பேட்டை: வளத்தியில் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, வளத்தியில் மங்களாம்பிகை உடனுறை மருதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, மாலை 5:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அன்னாபிஷேகம். தீபாரதனை நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கினர். இதில் கோவில் நிர்வாகி முருகசேன் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.