உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மொரட்டாண்டி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு ஹோமம்!

மொரட்டாண்டி கோவிலில் விநாயகருக்கு சிறப்பு ஹோமம்!

புதுச்சேரி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மொரட்டாண்டி கிரகசாந்தி விநாயகருக்கு நேற்று சிறப்பு ஹோமம் நடந்தது. மொரட்டாண்டியில்  விஸ்வரூப மஹா சனீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு 54 அடி உயர கிரகசாந்தி விநாயகர் சன்னதியில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், பன்னீர், மஞ்சள் ஆகிய மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.  பின்னர் 1008 லட்டு ஹோமம் நடந்தது. விநாயகர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாராம குருக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !