சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை
ADDED :3268 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாபேட்டை, செம்பொன்ஜோதீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. பழைய கரூர் சாலையில் பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில், செம்பொன்ஜோதீஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பலரசம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலைகளால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், சிந்தலவாடி பகுதியில் உள்ள அய்யனர்கோவில் செல்லும் பாதையில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன.