உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை!

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை!

கிணத்துக்கடவு: சூலக்கல் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று வெள்ளிக்கிழமையன்று காலை 7.30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் போன்றவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டு, சுயம்பு அம்மனுக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சூலக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், வெளியூரைச் சேர்ந்த எராளமான பக்தர்கள் வந்திருந்து மாரியம்மனை வழிபட்டு, தீர்த்தம் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !