நவபாஷாண கடல் நீர்மட்டம் கண்காணிக்க அளவுகோல்
ADDED :3325 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடலில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக, நீர்மட்டத்தை கண்காணிக்க, அளவுகோல் அமைக்கப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் நவபாஷாண கடலில், தோஷ நிவர்த்தி, பரிகார பூஜைகளுக்காக, ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். நவபாஷாண கடலில் ஏற்படும் மாற்றங்கள், நீரின் சுழற்சி, தட்பவெப்பம், நீர்மட்டம், நீரோட்டம் ஆகியவற்றை கண்டறிவதற்காக, மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், கடலுக்குள் அளவுகோல் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், நவபாஷாணம் வரும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள், கடல் கொந்தளிப்பு, நீரின் சுழற்சி, நீர்மட்டம் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.