ராஜகணபதி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :3325 days ago
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் ராஜகணபதி ஆலயத்தில், சங்கடஹர சதுர்த்தி விழா நேற்று நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் அருகே, ஏத்தாப்பூர், பழைய பாலம், தீக்குழி மைதான வளாகத்தில், ராஜகணபதி ஆலயம் உள்ளது. அங்கு, சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மூலவர் ராஜகணபதி, வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.