நத்தம் பகுதி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :3277 days ago
நத்தம், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நத்தம் பகுதி விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதே போல் நத்தம், கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகருக்கும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.