விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விசேஷம்
ADDED :3277 days ago
ஊத்துக்கோட்டை: விநாயகர் கோவிலில் நடந்த, சங்கடஹர சதுர்த்தி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர். ஒவ்வொரு மாதமும், விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, சங்கடஹர சதுர்த்தி தினத்தை ஒட்டி, ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு பூஜை நடந்தது. பின், மலர் அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.