கம்மாபுரம் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :3278 days ago
கம்மாபுரம்: கார்த்திகை மாத சதுர்த்தியையொட்டி, கம்மாபுரம் பகுதி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கம்மாபுரம் காவல் விநாயகர் கோவிலில், காலை 8:00 மணியளவில் அபிஷேக ஆராதனை நடந்தது. அதில், ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதேபோல், கம்மாபுரம் மருத்துவ விநாயகர் கோவில், ஊ.மங்கலம் பிள்ளையார் கோவில், பெரியகோட்டுமுளை சித்தி விநாயகர் கோவில்களில் கார்த்திகை மாத சதுர்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.