உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிதுர்தோஷம் என்றால் என்ன?

பிதுர்தோஷம் என்றால் என்ன?

முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளை பிதுர்க்கடன் செய்தல் என்பர். அமாவாசை தர்ப்பணம், வருஷ திதி கொடுத்தல் போன்றவை இதில் அடக்கம். இதைச் சரியாகச் செய்யாவிட்டால் பிதுர்தோஷம் என்னும் பாவம் உண்டாகும். நம்முடைய தலைமுறையில்  சரியாக பிதுர்க்கடன் செய்கிறோமே... நமக்கு  எப்படி இது பொருந்தும் என கேட்கலாம். முன்னோர்களில் சிலர் தர்ப்பணம் செய்யாமல் விட்டிருந்தாலும், வாரிசு இல்லாமல் இறந்த பங்காளிக்கு பிதுர்க்கடன் செய்யாமல் போனாலும் கூட இந்த தோஷம் பாதிக்கும். முதலில் ராமேஸ்வரம் அல்லது ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர்,  திருவையாறு, சாயாவனம், அவினாசி, தென்காசி போன்ற தலங்களில் பரிகாரம் செய்ய வேண்டும். அதன்பின் அமாவாசை, மகாளய பட்சம், வருஷ திதிகளை  செய்தால் சந்ததியோடு நலமாக வாழலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !