வேதனையின்றி உயிர் பிரிய என்ன வழிபாடு மேற்கொள்ளலாம்?
ADDED :3642 days ago
அடியவர்கள் பலர், எல்லா தெய்வங்களிடமும் வேதனையின்றி உயிர் பிரிய வரம் வேண்டி பாடியிருக்கிறார்கள். சிவ பூஜையின் முடிவில் உள்ள ஒரு பிரார்த்தனை ஸ்லோகம் இந்தக் கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அநாயாஸேன மரணம் விநா தைன்யேன ஜீவனம்ந க்ருபயா தேஹி மே சம்போ த்வயி பக்தி: அசஞ்சலம்நந இதன் பொருள், எந்தக் கஷ்டமும் இல்லாமல் அநாயாசமாக உயிர் பிரிய வேண்டும். யாரிடமும் அடிபணிந்து நிற்காத வாழ்வு வேண்டும். உயிருள்ளவரை உன்னிடத்தில் அசையா பக்தி வேண்டும். இதைக் கருணை கூர்ந்து அருள வேண்டும் என்பதாகும். இந்த மந்திரத்தையோ, இதன் பொருளையோ தினமும் சொல்வது நல்லது. த்ரயம்பகம் யஜா மஹே எனும் மந்திரத்தையும் சொல்லி வழிபடலாம். இதன் மூலம் பயமில்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.