உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீணாகப் பொழுது போக்காதீர்!

வீணாகப் பொழுது போக்காதீர்!

ராட்டையில் நூல் நூற்கும் பழக்கமுடையவர் மகாத்மா காந்தி. அரபுநாட்டிலும் பெண்கள் ராட்டை சுற்றும் பழக்கம் கொண்டிருந்தனர். வீட்டு வேலை இல்லாத ஓய்வு நேரங்களில் வீடுகளில் ராட்டை சுற்றும் சப்தம் கேட்கும். இதைப்பற்றி நபிகள் நாயகம் கூறும் போது, “ராட்டை மனஅமைதியைத் தரும் சாதனம். ராட்டை சுற்றுவது சிறந்த கைத்தொழில்,” என்றார். பெண்கள் ஓய்வு நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேவையில்லாமல் தூங்குதல், டிவிக்களில் மனதைக் கெடுக்கும் தொடர்களைப் பார்த்தல், பிறர் தன்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காக அளவுக்கு மீறி அலங்காரம் செய்து நேரத்தைப் போக்குதல், சினிமா தியேட்டர் வாசல்களில் காத்துக் கிடந்து படம் பார்த்தல் போன்றவற்றைச் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக தையல், எம்பிராய்டரி, வீட்டை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். நபிகள் நாயகம், மெக்காவில் இருந்து மெதீனா சென்ற பிறகு, பெண்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்தினார். ஆனால், ஒழுங்குமுறைகளுடன் கூட்டப்படும் கூட்டங்களுக்கு மட்டுமே அவர் செல்வார். அவர்களுக்கு போதனை தந்ததுடன், அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் பதில் சொல்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !